இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானவர்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கையில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக இலங்கையில் 1984.12.02அன்று மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.
கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும், சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.
இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான் எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர்.
தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
#SriLankaNews