இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்து MakeMyTrip இணையதளம் நடத்திய ஆய்வில், இலங்கை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியர்கள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகளின் அடிப்படையில் தரவரிசை பின்வருமாறு:
தாய்லாந்து
ஐக்கிய அரபு இராச்சியம்
இலங்கை
வியட்நாம்
இலங்கை இந்த இடத்தைப் பிடிக்கப் பின்வரும் காரணங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இந்தியர்களுக்கான விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டமை. குறைந்த செலவிலான விமானப் பயணங்கள் மற்றும் தங்குமிட வசதிகள்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா மையங்களில் மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்து தவிர மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா (UK), அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் இந்தியர்களின் விருப்பமான பட்டியலிலிருந்து நீங்காத இடம்பிடித்துள்ளன. குறிப்பாக வியட்நாம் நோக்கிய பயண ஆர்வம் கடந்த ஆண்டுகளை விடப் பெருமளவில் அதிகரித்துள்ளதாக MakeMyTrip சுட்டிக்காட்டியுள்ளது.