இலங்கையின் பணவீக்கம் 1.6% ஆக வீழ்ச்சி: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

14 20

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2026 ஜனவரி மாதத்தில் 2.4% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், உள்நாட்டில் நுகர்வோர் விலைச் சுட்டெண் குறைவடைந்துள்ளமை பொருளாதார ரீதியில் ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. எனினும், எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டண மாற்றங்கள் பணவீக்கத்தில் மீண்டும் தாக்கத்தைச் செலுத்தக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version