நாடு மீண்டும் சிவப்பு வலயத்தில் உள்ளடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரங்கு நீங்கி தற்போது வழமைபோல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.
இதனால் கொரோனா அலை மீண்டும் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அரசு பொறுப்புடன் செயற்படா விட்டால் நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்து மீண்டும் சிவப்பு வலயத்தில் நாடு இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே மக்களும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews