உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.
22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில், கட்டாரைத் தவிர பங்கேற்கவுள்ள ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமே தெரிவாகவுள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய உலகக் கோப்பை காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக 13 அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கண்டத்தில், போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இப்போட்டியில் வெற்றிபெற்று முதல் அணியாக ஜேர்மனி உலகக் கோப்கை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
Leave a comment