வீனஸ் பிரீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடர் ஆரம்பம்!

VPL எனப்படும் வீனஸ் பிரீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடர் நேற்று (6) ஆரம்பமானது.

புத்தூர் மணற்பகுதி வீனஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் நான்கு அணிகள் பங்குபெறும் வீனஸ் பிறீமியர் லீக் ஆனது நான்கு அணி உரிமையாளர்களால் அணிவீர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட வீர்ர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணிகளாகும். புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்

நேற்று மாலை ஆரம்பமான போட்டியில் பங்குபற்றிய அணிகள்
A-வீனஸ் வோரியர்ஸ்
B- வீனஸ் சிறுத்தைகள்
C-வீனஸ் வின்னர்ஸ்
D-வீனஸ் றோயல்ஸ் என்பனவாகும்.

நேற்றையதினம் நடைபெற்ற முதல்நாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் வீனஸ் வோரியர்ஸ் அணியும்
வீனஸ் சிறுத்தைகள் அணியும் மோதிக்கொண்டன.

இதில் வோரியன்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதில் வோரியனஸ் அணியை சேர்ந்த முன்கள வீரர் கபில்ராஜ் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் வீனஸ் வின்னர்ஸ் அணியும் வீனஸ் றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் வீனஸ் வின்னர்ஸ் 4:1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. வீனஸ் வின்னர்ஸ் அணியை சேர்ந்த முன்கள வீரர் வினோயன் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து போட்டிகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி இறுதிப் போட்டிகள் இடம்பெறும்.

பின்வரும் நேர அட்டவணை மூலம் போட்டிகள் இடம்பெறும்.

07/08/2022 4.00 C vs B
07/08/2022 5.00 A vs D
11/08/2022 4.00 C vs A
11/08/2022 5.00 B vs D
13/08/2022 4.00 D vs A
13/08/2022 5.00 B vs C
14/08/2022 4.00 D vs C
14/08/2022 5.00 A vs B
20/08/2022 4.00 D vs B
20/08/2022 5.00 A vs C

இறுதிப் போட்டிகள் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும்.

FB IMG 1659845616968

#sports

Exit mobile version