அமெரிக்க ஓபன் டெனிஸ் – கிண்ணம் வென்றார் எம்மா!!
அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார்.
கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து வீராங்கனை இவர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்து வந்தன.
இதில், 18 வயதான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் 19 வயதான கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோர் மோதினர்.
1999 க்குப் பின்னர் அமெரிக்க ஓபன் டெனிஸ் இறுதியில் இளவயது வீராங்கனைகள் மோதிய முதலாவது சந்தர்ப்பம் இது. இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.
Leave a comment