15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

Share

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும், தாம் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளன.

சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், சில அணிகள் குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்துள்ளன.

இதன்படி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, ருதுராஜ்க்கு 18 கோடி, மதீச பத்திரனவுக்கு 13 கோடி, சிவம் துபேக்கு 12 கோடி, ஜடேஜாவுக்கு 18 கோடி, மஹேந்திர சிங் தோனிக்கு 4 கோடி ரூபாய்களை வழங்கி அவர்களை தக்க வைத்துள்ளது.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஸ் தயாள் ஆகிய மூவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக விராட் கோலிக்கு 21 கோடி ரூபாயும், ரஜத் பட்டிதர்க்கு 11 கோடி ரூபாயும், யாஸ் தயாளுக்கு 5 கோடி ரூபாய் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு 18 கோடி, சூர்யகுமார் யாதவ்வுக்கு 16.35 கோடி, ஹர்திக் பாண்டியாவுக்கு 16.35 கோடி, ரோஹித் சர்மாவுக்கு 16.30 கோடி, திலக் வர்மாவுக்கு 8 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ரிங்கு சிங்குக்கு 13 கோடி, வருண் சக்கரவர்த்திக்கு 12 கோடி, சுனில் நரைன்னுக்கு 12 கோடி, ரஸலுக்கு 12 கோடி, ஹர்சித் ராணாவுக்கு 4 கோடி, ரமன்தீப் சிங் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், பெட் கம்மின்ஸ்ஸ_க்கு 18 கோடி, அபிசேக் சர்மாவுக்கு 14 கோடி, நிதிஸ் ரெட்டிக்கு 6 கோடி, ஹென்ரிச் கிளாசன் 23 கோடி, டிராவிஸ் ஹெட் 14 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்ட அடிப்படையில் அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்ஸில், ரசித் கான் 18 கோடி,சுப்மன் கில் 16.50 கோடி, சாய் சுதர்சன் 8.50 கோடி, ராகுல் தேவாட்டியா 4 கோடி, சாரூக்கான் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரான்னுக்கு 21 கோடி ரூபாய், ரவி பிஸ்னாய்க்கு 11 கோடி ரூபாய், மாயங் யாதவ்வுக்கு 11 கோடி ரூபாய்,,மோசின் கானுக்கு 4 கோடி ரூபாய், ஆயுஸ் பதோனிக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸில் சஞ்சு சம்சன்னுக்கு 18 கோடி ரூபாய், ஜெய்ஸ்வால்லுக்கு 18 கோடி ரூபாய், ரியான் பராக்க்கு 14 கோடி ரூபாய், துரூவ் ஜூரல்லுக்கு 14 கோடி, சிம்ரன் ஹெட்மயருக்கு 11 கோடி. சந்தீப் சர்மாவுக்கு 4 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாசாங் சிங் 5.5 கோடி, பிராப்சிம்ரன் சிங் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கெபிட்டல்ஸ் அணியில் அக்சர் பட்டேல் 16 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிசேக் போரெல் 4 கோடி ரூபாய்;க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...