யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக தமிழ்நாடு இளையோர் அணிக்கும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டி நேற்று இரவு புத்தூர் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றது.
கரப்பந்தாட்ட ரசிகர்கள் புடைசூழ இந்த போட்டி வெகு விமர்சையாகவும் பலத்த எதிர்பார்ப்புடனும் இடம்பெற்றது.
இந்தப் போட்டியினை இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
மூன்றுக்குப் பூச்சியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு இளையோர் அணி போட்டியை வெற்றி கொண்டது.
முதலாவது சுற்றில் 25க்கு 18, இரண்டாவது சுற்றில் 25:21 என்ற அடிப்படையிலும் , பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சுற்றில் யாழ் மாவட்ட அணி, 25 23 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவிக் கொள்ள கரப்பந்தாட்ட போட்டி தமிழ்நாடு இளைஞர் அணி தன தாக்கிக் கொண்டது.
உலக தரவரிசை லிப்ரோ வீரர்கள் 2 உள்ளடங்களாக 14 பேர் கொண்ட இந்திய அணி குழாம் இந்த போட்டியில் பங்கு பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
#sports
Leave a comment