தென்னாபிரிக்காவை வென்று இலங்கை அணி சாதனை!!

sri lanka s cricketers celebrate their victory by 78 runs at the end of the third one day internatio 1631033608 3627

சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதன்படி, 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் அறிமுகப்போட்டியில் களமிறங்கிய மஹீஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

21 வயதான இவர் அறிமுகப் போட்டியில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கையின் முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

துஷ்மந்த சமீர 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version