சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம்!!

warne getty new 1641902802368 1645843808495

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார்.

மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும் உடனடியாக மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைத்தும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இரண்டாவது பேரிழப்பு தரும் செய்தி இது அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

‘வார்னி’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களால் போற்றப்படுபவர், வார்னே இதுவரை விளையாடிய சிறந்த பந்து வீச்சாளராக பலரால் கருதப்படுகிறார்.

அவரது நட்சத்திர சர்வதேச வாழ்க்கை 15 ஆண்டுகளாக நீடித்தது. இவர் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Sports

 

Exit mobile version