பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

PSX 20210902 161451

பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் 2020 போட்டிகளில் பதக்கம் பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு பண வெகுமதிகளை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் துலன் கொடித்துவக்கு ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சால் ஹேரத்துக்கு 50 மில்லியன் ரூபாவும், கொடித்துவக்குவுக்கு 20 மில்லியன் ரூபாவும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வேண்டுகோளின் பேரில், இந்த சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது என விளையாட்டுத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை பின்வருமாறு:

தங்கம் – ரூ. 50 மில்லியன்.
வெண்கலம் – ரூ. 20 மில்லியன்.
4 ஆவது – 8 ஆவது இடம் – ரூ. 2.5 மில்லியன்
9 ஆவது -16 வது இடம் – ரூ. 1 மில்லியன் (x4)
உலக சாதனை – ரூ. 10 மில்லியன்.

Exit mobile version