பொங்கல் திருநாளை யோட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடக்கம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் விடப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மொத்தமாக 21 காளை மாடுகளை அடக்கி முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.
சிவகங்கை _ புலியூரை சேர்ந்த சூறாவளி என்பவரின் காளை சிறந்த காளைக்கான பரிசை வென்றது. சிறந்த காளைக்கு காரும், பிரபாகரனிற்கு இருசக்கர வாகனம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
இதன்போது ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதலிடம் பிடித்த வீரர் பிரபாகரன் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பாக முதல்வர் அவர்கள் நல்தொரு முடிவு எடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் பிரபாகரன் கூறியுள்ளார்.
இதில் முன் பதிவு செய்யப்பட்ட 729 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. வீரர்கள் 300 பேர், போட்டி போட்டுக் கொண்டு, காளைகளை அடக்க பாய்ந்தனர். கொரோனா காரணமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பதிவு செய்யப்பட்ட காளைகள், கால்நடைத் துறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
இந்த போட்டியில் பார்வையாளர்கள் உட்பட 36 பேர் காயம் ஏற்ப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
#worldnews
Leave a comment