யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாவது முறையாக இடம்பெற உள்ளது.
இலங்கையிலே யாழ் மாவட்டத்தில் முதல்முறையாக குறித்த போட்டி சிறப்பாக நடைபெறவுள்ளது.
இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களை சேர்ந்த வீரர்கள் குறித்த போட்டியில் பங்குபெற்ற உள்ளனர்.
இதன் பிரதான நோக்கம் கழகங்களில் உள்ள சிறந்த வீரர்களை விளையாட்டில் ஈடுபடுத்துதல் மற்றும் பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மற்றும் தோல்வி பெற்று அணிகளையும் குறித்த கரப்பந்தாட்ட போட்டியில் இணைத்து அவர்கள் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் நிகழ்வாக குறித்த கரப்பந்தாட்ட போட்டி இடம்பெற உள்ளது.
இது மாத்திரமன்றி பெண்கள் அணியும் இதில் இணைத்துக்கொள்ள விரும்புகின்றோம் என யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ந.செந்தூரன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews