மெஸ்சியை தொடர்ந்து நெய்மருக்கு பிரமாண்ட கட்-அவுட் – அதிரடி காட்டும் கேரள ரசிகர்கள்

1786832 neymar1667498441

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்துள்ளனர்.

அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்-அவுட்டை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இது வைரலானதை தொடர்ந்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இதுபோல கட்-அவுட் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று பிரேசில் கால்பந்து ஜாம்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் அதே செருபுழா ஆற்றில் கட்-அவுட் அமைத்தனர்.

இந்த கட்-அவுட் மெஸ்சியின் கட்-அவுட்டை விட 10 அடி உயரமாக 40 அடியில் நிறுவப்பட்டது. ஆற்றுக்குள் அடுத்தடுத்து மெஸ்சி, நெய்மரின் கட்-அவுட்கள் காணப்படுவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

#India #Sports

Exit mobile version