கிரிகெட் வீரர் எம்.எஸ்.டோனி தனது ரோல் மாடல் எப்போதுமே சச்சின்தான் என உருக்கத்துடன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ளது.
பொதுமக்களுடன் டோனி கலந்துரையாடினார். அப்போது ஒருவர், உங்களுடைய கிரிக்கெட் ரோல் மாடல் யார்? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர்தான். உங்களைப் போலவே நானும் சச்சின் விளையாடுவதைப் பார்த்து, எப்போதும் அவரைப் போல விளையாட வேண்டும் என நினைத்தேன்.
பின்னர்தான் நான் உணர்ந்தேன். என்னால் அவரைப் போல விளையாட முடியாது என்று. என் இதயத்தில் அந்த ஆசை எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.
இவரின் இந்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#Dhoni #Cricket
Leave a comment