இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரரரும் விக்கெட் காப்பாளருமாகிய குசல் மென்டிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சாணக்கவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடரின் விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமல் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னரே, சகலதுறை வீரர் சாமிக கருணாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் அவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதுடன் பூரண குணமடைந்துள்ளார். இவர் பெரும்பாலும் இன்றிரவு ஆஸ்திரேலியா நோக்கி பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், ஐந்து போட்டிக்களைக் கொண்ட டி-20 போட்டிகள் பெப்ரவரி 11ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews