செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள்

Share
tamilnid 11 scaled
Share

ஐ.பி.எல் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது.

17 ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான துபாயில் நேற்று (19.12.2023) நடந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் 214 பேர் இந்தியர்களும் 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 2024 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் 24.75 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் மிட்செல் ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு,

மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)
பாட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

மேலும் 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களின் விபரம் பின்வருமாறு

எம் எஸ் தோனி, டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஆரவெல்லி அவனிஷ், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், டேரில் மிட்செல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் துஷார், தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷ பத்திரன, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, சமீர் ரிஸ்வி

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...