சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் சம்பியன்!

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை  தனதாக்கியது.

பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென் பீற்றர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று பிற்பகல் பொற்பதி சென் பீற்றர்ஸ் விளையாட்டு மைதானத்தில்
இடம்பெற்றது.

சக்கோட்டை  சென் சேவியர் விளையாட்டுக் கழகம் மற்றும் யங் லயன் அணியும் மோதியதில்  சக்கோட்டை சென் சேவியர் அணி ஒரு கோலை போட்டு வெற்றியை தனதாக்கியது.

வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள், பதக்கங்கள் பணப்பரிசில்கள் என்பன விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை நீண்ட தூர ஓட்டம், முட்டியுடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுக்கள் நேற்று காலை முதல்  இடம் பெற்றது. இதில் வெற்றியீட்டிய. வீர வீரங்கனைகளுக்கான பரிசில்கள், பண பரிசில்கள் என்பனவும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,  மருதங்கேணி கோட்ட கல்வி அதிகாரி சிறிராமசந்திரன், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, கிராம சேவகர் பிரதீபன், பொற்பதி பங்குத்தந்தை ஜோன் குறூஸ்,
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் நவநீதமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

IMG 20230410 WA0030

#sports

Exit mobile version