பீஜிங் மரதன் ஓட்டப்போட்n, கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பீஜிங் மரதன் ஓட்டப்போட்ட எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவிருந்தது.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
திடீரென தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு கூறியுள்ளது.
அனைவருமே டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய நாட்களில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பீஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்படடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#sports
Leave a comment