கிரிக்கெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 17.5 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இலாபம் 6.3 பில்லியன் ரூபா எனவும் இது வரலாற்றில் ஈட்டப்பட்ட பாரிய இலாபம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த நிதியாண்டில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் 120 வீத வருமான அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், உள்நாட்டு போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கொடுப்பனவுகள் மற்றும் அனுசரணை மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.