விளையாட்டுசெய்திகள்

பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி

Share
236410520 198286172350925 6733220571755494107 n
Share

பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி

பிரபல கால்பந்து வீரர் பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் 34 வயதான லயோனல் மெஸ்சி, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.

தனது 13ஆவது வயதில் பார்சிலோனா கிளப்பில் இணைந்த மெஸ்சி தொடக்கத்தில் ஜூனியர் அணிக்காகவும், 17-வது வயதில் இருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காகவும் அடியெடுத்து வைத்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்தார். பார்சிலோனா அணிக்காக லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலக கோப்பை உள்பட 35 பட்டங்களை குவித்ததில் முக்கிய பங்காற்றினார்.

தனது கடைசி காலம் வரை பார்சிலோனா குடும்பத்திலேயே இணைந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவரை பார்சிலோனா கிளப் வெளியேற்றியது. இதனால் 21 ஆண்டு கால பார்சிலோனா உடனான அவரது பந்தம் முடிவுக்கு வந்தது.

கடுமையான நிதிநெருக்கடியில் தவிக்கும் பார்சிலோனா கிளப், வீரர்களின் ஊதிய உச்சவரம்பில் புதிய மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாக அடுத்த 5 ஆண்டு கால ஒப்பந்தம் தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 50 சதவீதம் ஊதியம் குறைக்க மெஸ்சி முன்வந்தபோதிலும் பலன் இல்லை.

‘பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி வரை அந்த அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் அளித்திருக்கிறேன். ‘பார்சிலோனாவுக்கு குட்பை’ சொல்வேன் என கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. உண்மையிலேயே பார்சிலோனாவை விட்டு பிரிவதற்கு கடினமாக இருக்கிறது’ என்று கூறி மெஸ்சி தேம்பி தேம்பி அழுதார்.

இந்த நிலையில் மெஸ்சி, பார்சிலோனாவில் இருந்து விடைபெற்ற அடுத்த 2 நாள்களில் புதிய கிளப்பில் இணைந்துள்ளார். பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரது தந்தை ஜார்ஜ் நேற்று உறுதிப்படுத்தினார். புதிய ஒப்பந்தப்படி மெஸ்சிக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.305 கோடி ரூபா ஊதியமாக கிடைக்கும்.

இதே கிளப்பில் தான் பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார், பிரான்சின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே விளையாடி வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணி கைகோர்த்து பி.எஸ்.ஜி. அணியின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை கனவை நனவாக்கும் என்பது அந்த கிளப்பின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...