இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல்
உலகக் கிண்ண ரி-20 தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில நாள்களில் ரவி சாஸ்திரி தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ரவி சாஸ்திரி. வயது மூப்பு காரணமாக இவர் விரைவில் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளார் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
ரி-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர், பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதன்பிறகு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Leave a comment