டோனியின் ருவிற்றர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மகேந்திர சிங் டோனியின் ருவிற்றர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் அதிகாரப்பூர்வ ருவிற்றர் பக்கத்தை அங்கீகரிக்க ‘ப்ளூ டிக்’ ஒப்சனை ருவிற்றர் நிறுவனம் கொடுத்துவருகிறது.
டோனியை 8.20 மில்லியன் பேர் ருவிற்றர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில், தற்போது டோனி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். கடைசியாக டோனி கடந்த ஜனவரி 8-ஆம் திகதியன்று ட்வீட் செய்துள்ளார்.
அதன்பிறகு அவர் ட்வீட் ஏதும் பகிரவில்லை. ருவிற்றரின் இந்த செயலால் டோனிக்கு இப்போதைக்கு ருவிற்றரில் அதிகாரப்பூர்வ பக்கமோ அல்லது கணக்கோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment