Anderson 3 696x392 1
விளையாட்டுசெய்திகள்

ஆண்டர்ஸனைக் கடும் வார்த்தைகளால் திட்டிய கோலி!!

Share

ஆண்டர்ஸனைக் கடும் வார்த்தைகளால் திட்டிய கோலி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியானது தற்போது நான்காவது நாளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இரு அணிகளுமே முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியுள்ள நிலையில், தற்போது நான்காவது நாளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான அதிக எதிர்பார்ப்புடன் போட்டி பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய நான்காவது போட்டியின்போது இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆண்டர்சனை கடுமையான வார்த்தைகளில் திட்டிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் இளம் வீரரான சிராஜை வேண்டுமென்றே ஆண்டர்சன் சீண்டியிருந்தார். தற்போது இன்றைய போட்டியிலும் கோலியை அதே போன்று சீண்டிப் பார்த்தனர். ஆனால் விராத் கோலியோ தனக்கே உரித்தான பாணியில் அவருக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார்.

இன்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சின்போது துவக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து நிலையில் விளையாட வந்த விராட் கோலி 17ஆவது ஓவரில் போது புஜாரா அடித்த பந்தில் ஒரு ரன் ஓடலாம் என்று நினைத்தார்.

ஆனால் பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த கோலி “இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன்”, “உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது” என கெட்ட வார்த்தையுடன் அவரை திட்டினார். கோலி இவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...