வரவிருக்கும் நத்தார் , புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews