மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்!

mak go

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளனர்.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்தக் கூட்டம் நடாத்தப்பட உள்ளது, நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இந்த ஆளும் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version