அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
புத்தாண்டில் நடைபெறும் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவென்பதால் முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
குறிப்பாக இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்த தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளன.
டொலர் பிரச்சினை, மின்நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
#SriLankaNews