சிறுவர் வழக்குகளுக்கு விசேட நீதிமன்றம்!

ALI

சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் சட்டங்களில் பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version