இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றபோதே, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை, அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.