சமூக வலைத்தளங்களுக்கு தடை? – விரைவில் புதிய கட்டுப்பாடுகள்

socialmediatools

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களால் இன்று ஏற்பட்டுள்ள கலாசார, தேசிய மற்றும் சமூகப் பேரழிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று டிக் டொக் என்ற சமூக வலைதளம் இயங்கி வருவதாகவும், சமூக ஊடகங்களில் இவற்றால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் என்றும், இதனை ஒழுங்குபடுத்துவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறவில்லை.

#SriLankaNews

Exit mobile version