பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் 2021 பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணணி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள யோகபுரம் மயில்வாகனம் தமிழ் மகா வித்தியாலயத்திற்கே குறித்த ஸ்மாட் வகுப்பறைகள் வழங்கப்பட்டன.
கலாநிதி ராகவன் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கதிர்வேல் செவ்வேள் இந்த உபகரணகளை பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
#SrilankaNews
Leave a comment