வடமாகாணத்தில் உள்ள பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இன்று (28) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழையினால் இரணைமடு குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வரவு காரணத்தினால் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலத்திற்கும், இரண்டு வான் கதவுகள் 12 அங்குலத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு தெரிவித்திருந்தார்.
#SriLankaNews