” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் உடனேயே தம்மை பங்காளிக்கட்சியென சுதந்திரக்கட்சி அடையாளப்படுத்திக்கொள்ளும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஏதேனும் எதிர்ப்பு வரும்பட்சத்தில் தனிக்கட்சியாக தன்மை இணங்காட்டிக்கொள்கின்றது.
உரப் பிரச்சினை, யுகதனவி விவகாரம் போன்றவற்றுடன் தமக்கு தொடர்பு இல்லை என காட்டிக்கொள்ளவே அக் கட்சியினர் முற்படுகின்றனர். அன்று முதல் இன்றுவரை அரசுக்குள் இருந்துகொண்டு இதைத்தான் செய்கின்றனர்.” – என்றார் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம.
#SriLankaNews