download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Share

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உட்பட ஆறு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற வகையில் கடந்த ஏழு சபை அமர்வுகளில் தங்களால் முன்வைக்கப்பட்ட எந்த ஒரு அபிவிருத்தி செயல்பாடுகளையும் தவிசாளர் செயல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன் வைத்து வெளி நடப்பு செய்துள்ளனர்.

இதேவேளை செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,பூட்டிய அறையில் அமர்வு இடம் பெற்றுள்ளது.

வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவிக்கையில், சில ஒதுக்கீடுகளும் பாகுபாடு அளவில் செயல்படுத்த படுவதாகவும்,கிராமங்கள் தோறும் வழங்கப்பட்ட மின் குமிழ்கள் சபை உறுப்பினர்களுக்கு 10 அல்லது 15 என்றும் தவிசாளர் 61 மின்குமிழ்கள் தமது தொகுதியில் பொருத்தியதாகவும்,கடந்த புயல் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிரதேச சபைகளுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்காமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபை பகுதிக்குள் பல்வேறு அனர்த்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்த போதும் அரச நிதியை பெற்றுக்கொள்ள சேதங்கள் குறித்த கோரிக்கை வைக்கப்படாத காரணத்தினால் நீதி பெறப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசமட்ட பொதுக்கூட்டங்களுக்கு தவிசாளர் செல்வதில்லை என்பதும் பாகுபாட்டுடன் செயல்படுவதும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் உட்பட மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 8 ஆவது அமர்வில் 17 உறுப்பினர்கள் மட்டுமே சமூகம் அளித்திருந்ததாகவும், அமர்வில் இருந்து தமிழரசு கட்சி உறுப்பினர்கள் 5 மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் ஒன்றும் 6 உறுப்பினர்கள் தவிசாளரின் அதிருத்தியான நடவடிக்கை குறித்து வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஏனைய மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் இவ்வாறான அதிருப்தியின் காரணமாக இருந்து வருவதாகவும் கட்சி ரீதியாக குறித்த உறுப்பினர்களால் மீறி செயல்பட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...