Kasippu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் பரபரப்பு: கசிப்பு வியாபாரியைத் தப்ப வைத்த உறவினர்கள் – பெண்கள் உட்பட 6 பேர் கைது!

Share

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரிப்பு தோட்டம் பகுதியில், கசிப்பு வியாபாரியைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸாரைத் தாக்கி, அவரைத் தப்பியோட வைத்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (17) மாலை ஆயித்தியமலை பொலிஸார், கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த 62 வயதுடைய வியாபாரியை 180 மி.லி கசிப்புடன் பொலிஸார் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதன்போது, குறித்த நபரின் உறவினர்களான பெண்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரைத் தள்ளி வீழ்த்தி, கைகலப்பில் ஈடுபட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் அவர்களை வீடியோ பதிவு செய்துவிட்டு தற்காலிகமாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.

வீடியோ ஆதாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கரடியனாறு பகுதிக்குத் தப்பியோடிய ஒருவரை, கரடியனாறு பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். கடமையைச் செய்ய விடாது தடுத்தமை மற்றும் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (18) மூன்று பெண்கள் உட்பட மேலும் 5 பேர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தப்பியோடிய 62 வயது கசிப்பு வியாபாரியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...