“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” – ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!!

2016 09 15 11963 1473929226. large

“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” எனக்கு அனுமதி வழங்குங்கள் எனக்கோரி சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தான் சேவைசெய்த காணி மறுசீரமைப்பு ஆணையத்திலிருந்து சில காரணங்களினால் நீக்கப்பட்டதால், மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற தன்னால் அந்த கடனை அடைக்க முடியாமல் போனதாலும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்.

“கடனை அடைக்க முடியாமையால் தற்கொலை செய்து கொள்ள பாராளுமன்ற ஒப்புதல் பெறுதல்”  என்று இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கடிதம் என்ற தலைப்பில் அண்மையில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகரவரிசையில் இருந்து உயர்தரம் வரை நீண்டகாலம் கல்வி கற்றமைக்காக இந்நாட்டு மக்கள் , வரி செலுத்துவோருக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version