இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த பயணத் தடை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நீக்கப்படுகிறது என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிங்கப்பூர் தனது தடையை நீக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நட்டு பயணிகள் சிங்கப்பூர் அரசாங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடங்களிலும், சிங்கப்பூர் வாசிகள் தமது வீடுகளிலும் 10 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

