பாகிஸ்தான் கொலைச்சம்பவம் போல் இலங்கையிலும் நடந்துள்ளது – சாணக்கியன்!!

WhatsApp Image 2021 12 08 at 6.51.00 PM

பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில் கூட இடம்பெற்றுள்ளன. – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோழர் பிரியந்தகுமாரவின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை இலங்கையிலுள்ள இளைஞர்கள் கண்டிக்கின்றனர். அனுதாபம் தெரிவிக்கின்றனர். இலங்கையிலும் இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

56,58 காலப்பகுதியில் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீதுதாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கறுப்பு ஜுலையின்போதும் தமிழ் இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவை தொடர்பான படங்களும் உள்ளன.  – என்றார்.

#SrilankaNews

Exit mobile version