பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மலையகத்திலும் கையெழுத்து போராட்டம்!

sri lanka ceylon tea plantation workers village

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தும் போராட்டம் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மற்றும் மலையக சிவில் அமைப்புகளின் பங்கேற்புடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபபடுகின்றது.

இதன்படி நாளை காலை 9 மணிக்கு மாத்தளையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறும்.

அதன்பின்னர் நண்பகல் 12 மணிக்கு கண்டியிலும் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version