மீனவரின் பிரச்சினைக்காக யாழில் கையெழுத்து வேட்டை!!

இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

VideoCapture 20211204 111455

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர்  ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version