பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக யாழில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220223 113009

#SriLankaNews

 

Exit mobile version