விசேட அதிரடிப்படையினரால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

விசேட அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

kili 03

#SrilankaNews

Exit mobile version