உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய gன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிதியின் கீழ் 80 சென்ரிமீற்றர் நவீன தொலைக்காட்சி,இறுவட்டு இயக்கி மற்றும் நீர் தாங்கி ஆகியன செல்லப்பா சனசமூக நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடைய செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் மற்றும் கோப்பாய் உதவி பிரதேச செயலாளர் ச.ராதிகா மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் அகீபன் மற்றும் சன சமூக நிலைய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#SrilankaNews
Leave a comment