இந்திய தூதரக ஏற்பாட்டில் சித்த மருத்துவ முகாம்!!

DSC02917

யாழ் இந்திய துணை தூதரகம் மற்றும் வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

சங்கானையில் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக சித்த மருத்துவ முகாம் இந்திய துணை தூதுதர் ராகேஸ் நடராஜ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஸ் நடராஜ் , வடமாகாண சித்த மருத்துவ திணைக்கள ஆணையாளர் ,வடக்கு மாகாண சுகாதார சுதேச  அமைச்சின் செயலாளர்,வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரன்,உப பிரதேச செயலாளர் திருமதி செந்தூரன், சித்த வைத்திய அதிகாரிகள் , கிராம அலுவலர்கள், சித்த வைத்திய பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

 

 

 

Exit mobile version