யாழ் இந்திய துணை தூதரகம் மற்றும் வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
சங்கானையில் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக சித்த மருத்துவ முகாம் இந்திய துணை தூதுதர் ராகேஸ் நடராஜ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஸ் நடராஜ் , வடமாகாண சித்த மருத்துவ திணைக்கள ஆணையாளர் ,வடக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர்,வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரன்,உப பிரதேச செயலாளர் திருமதி செந்தூரன், சித்த வைத்திய அதிகாரிகள் , கிராம அலுவலர்கள், சித்த வைத்திய பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment