பொலிஸ் அதிகாரியொருவர் நபரொருவரை தாக்கி அவரது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முயலும் காணொளியொன்று தற்போது வைரலாகியுள்ளது.
இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் இன்று (26) காலை பொலிஸ் துறையின், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பொலிஸ்துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் குறித்த காவல்துறை உயரதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பதவி உயர்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் இரு இளைஞர்களை தாக்கிய சம்பவமொன்று மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews