வவுனியா பேருந்துகளில் பாலியல் சீண்டல்களா!!!

vdvv

வவுனியாவிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் , பணியாற்றும் ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகளவில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலக உத்தியோகத்தர் போன்ற பாணியில் சீரான உடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பேரூந்தில் பெண்களுக்கு அருகேயுள்ள ஆசனத்தில் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்கின்றனர்.

சன நேரிசல் காணப்படுகின்ற சமயங்களில் பெண்களுடன் வேண்டுமென்றே உரசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபடும் இவ்வாறான ஓர் சில இளைஞர்களினால் பல பெண்கள் வேலையினை இடைவிட்டுள்ளனர்.

எனவே பொலிஸார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version