வழிப்பறி கொள்ளை! – மூவர் கைது

IMG 20220121 WA0034

சுன்னாகம் மற்றும் இளவாலை பகுதிகளில் பகல் வேளையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேக நபர்களிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் நகர நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் பொலிஸார் கூறினர்.

#SriLankaNews

Exit mobile version