இந்தியாசெய்திகள்

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

39 3
Share

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சீமான், “கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதும், பாட்டிலுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது தான் தியாகமா? கமிஷன் வாங்குவதும் லஞ்சம் பெறுவது தான் தியாகமா?

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ததும் திமுக தான். அவரை சிறையில் அடைத்து விட்டு தற்போது வரவேற்பதும் திமுக தான்.

அவர் அதிமுகவில் இருந்தால் கெட்ட திருடன், திமுகவில் இருந்தால் நல்ல திருடனா? அவர் இங்கு வந்ததும் குற்றம் அற்றவராக ஆகிவிடுவாரா?

தற்போதைய நிலையில் யார் அதிகம் கமிஷன் வாங்கி கொடுக்கிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர்” என்றார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...